×

போலி நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்கிய வடமாநில கும்பல் சிக்கியது

திருவள்ளூர்: திருவள்ளூர், கொண்டபுரம் தெருவில் நகை கடை நடத்தி வருபவர் விமல் சந்த் (62). இவரிடம் கடந்த ஜூன் 30ம் தேதி  2 பெண்கள் கடைக்கு வந்து 8 கிராம் பழைய நகைகளை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக புதிய நகைகளை வாங்கிச் சென்றுள்ளனர். மீண்டும் ஜூலை 1ம் தேதி மதியம் ஒரு மணியளவில் வேறு ஒரு பெண் அதே கடைக்கு வந்து 14 கிராம் எடைகொண்ட பிரேஸ்லெட்டை கொடுத்துவிட்டு புதிதாக 14 கிராம் எடை கொண்ட புதிய நகைகளை வாங்கி சென்றுள்ளார்.  இதனைத் தொடர்ந்து 2ம் தேதி விமல் சந்த் அந்தப் பெண்களிடம் வாங்கிய பழைய நகைகளை உருக்கி பார்த்துள்ளார். அப்போது அது போலியான நகைகள் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்துவிமல்சந்த் திருவள்ளூர் நகர போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிவிட்டு புதிய நகைகளை வாங்கி சென்ற பெண்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிரமாக தேடிவந்தனர். அப்போது சென்னையில் லாரியின் மூலம் தப்பிக்க முயன்ற 2 பெண்கள் உள்பட 4 பேரை பிடித்துவந்து விசாரணை மேற்கொண்டதில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கமலேஷ் (40), நிர்மல் குமார் (41), கமலேஷ் மனைவி அனிதா (40), பரமேசன் மனைவி மான்தி (40) என்றும் கூறினர். அப்பொழுது விசாரணையில் தாங்கள் கடந்த ஜூன் மாதம் உத்தர பிரதேசத்திலிருந்து போலியான ஆதார் கார்டுகளை பயன்படுத்தி ரயிலில் சென்னை வந்து வால்டாக்ஸ் ரோட்டில் ரூம் எடுத்து தங்கி நகை கடைகளில் போலி நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்கி ஏமாற்றி வருவதாகவும் ஒப்புக்கொண்டனர்.  போலீசார் 2 பெண்கள் உள்பட 4 பேரிடம் வேறு எங்கெங்கு போலி நகைகளை வைத்து  ஏமாற்றி வாங்கினீர்கள் என்று விசாரணை நடத்தினர். சென்னையில் பல்வேறு இடங்களிலும் பூந்தமல்லி, ஆவடி, போரூர், திருவள்ளூர் உள்பட பல்வேறு இடங்களிலும் ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து 4 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post போலி நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்கிய வடமாநில கும்பல் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : State ,Thiruvallur ,Vimal ,Chant ,Thiruvallur, Kondapuram Street ,
× RELATED உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்...